G PAY பின் நம்பர் மறந்துடுச்சா? இதோ வந்துவிட்டது புதிய முறை.!!
finger print and face lock system in upi
தற்போதைய நவீன காலத்தில் சிறு கடைகள் முதல் பெரிய பெரிய கடைகள் வரை upi பரிவர்த்தனை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த முறையிலும் சில அப்டேட்டுகளை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் மாற்றி வருகிறது.
இந்த நிலையில், PIN நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தற்போது UPI பணபரிவர்தனைக்கு PIN நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளதால், பயோமெட்ரிக் முறை இந்த சிக்கல்களை தீர்க்கலாம். ஆகவே PIN நம்பர் முறையை விட இது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
finger print and face lock system in upi