உச்சம் தொட்ட தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
23 july gold price in chennai
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .
இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.
நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,490 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,854 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,506 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,048-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,870 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 700 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 72.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.72,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
23 july gold price in chennai