அதிரடியாக குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!
23 4 2025 today gold and silvar price
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவு 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
23 4 2025 today gold and silvar price