அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,469 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,752-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,833 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,664-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,484 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,872-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,848 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,784 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை ரூ. 1300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 70.20 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 70,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

21 oct gold price in chennai


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->