தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.4,795ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 பைசா குறைந்து, ரூ.63.30 ஆகவும், 1 கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.63,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1.08.2022 gold Price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->