அதிக நேர இன்பத்திற்கு ஆசைப்பட்டு, அந்தரங்க இடத்தில் கிரீம் உபயோகமா?.. உஷார்.!
Sexual time Penis Cream Disadvanges Tamil First Night tips
இன்றுள்ள ஆண்களுக்கு பருவ வயதிற்கு முன்னதாகவே பாலியல் ரீதியான தகுந்த விளக்கங்கள் இல்லாத அறிமுகம் ஏற்பட்டு விடுகிறது. தினமும் ஆபாச படம் பார்த்தால் தான் தூக்கம் வரும், தினமும் கைப்பழக்கம் செய்தால் தான் தூக்கம் வரும் என்று பகலில் அமைதியான குணத்தை கொண்டவர்கள், இரவில் பல கற்பனைகளுடன் கைப்பழக்கத்தை மேற்கொண்டு தங்களின் ஆண்மை வீரியத்தை செயலிழக்க வைத்து வருகின்றனர்.
இந்த சூழல் இப்படியே தொடர்ந்து விட, 16 வயதுக்கு மேல் ஆபாச படங்களில் ஏற்படும் தாக்கமானது, திருமண வயதை எட்டுகையில் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை அல்லது தாம்பத்தியத்தில் மனைவியை திருப்தி படுத்த இயலாத சூழலுக்கு உள்ளாக்குகிறது. இதில், சிலர் இணையதளங்களில் உள்ள ஆண்மையை 5 நிமிடத்தில் கிடைக்க வைத்து, 10 மணிநேரம் ஆணுறுப்பு பலத்தை அதிகரிக்கலாம் என்று வீணாய்போன விளம்பரத்தை பார்த்து ஏமாறுகின்றனர்.

அவ்வாறாக நமக்கு தோற்றமளிக்கும் விளம்பரங்களில் ஒரேயொரு மாத்திரை.. குதிரை சக்தி... விடிய விடிய தேனிலவு கொண்டாட்டம்.. உங்கள் தாம்பத்திய இன்பத்திற்கு நாங்கள் கேரண்டி வாரண்டி என பல்வேறு வாசகங்களை சுருக்கமாக அடக்கிய வசனங்கள் இருக்கும். இந்த வசனங்கள் அனைத்தும் பிற்கால தாம்பத்தியத்தில் பேரிடி விழவும், அன்றைய நாளே பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தையும் தன்னகத்தே கொண்டது.
இதனைப்போன்று பெயர் தெரிவிக்க விரும்பாத நபரொருவர் வாங்கிய கிரீம் விளம்பரத்தில், இதனை ஆண்குறியில் தடவினால் இரவு முழுவதும் சோர்வே இருக்காது.. இனிக்க இனிக்க மனைவியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற வாசகம் இருந்துள்ளது. இதனைக்கண்டு மெய் சிலிர்த்துப்போன நபரொருவர், விந்து முந்துதலை தடுக்க வேண்டும் என்று எண்ணி கிரீமை ஆர்டர் செய்துள்ளார். தனது கற்பனையை மனதில் ஓடவிட்டு கிரீமை தடவி படுக்கையறைக்கு சென்றுள்ளார்.

கிரீமை தடவி படுக்கையில் இருந்தவருக்கு ஆண்குறியில் சொல்லமுடியாத எரிச்சல், அரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் காத்திருந்தவருக்கு ஆணுறுப்பு வீங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில், தாங்க முடியாத வலியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைப்போன்றே பலரும் பல நேரத்தில் பிரச்சனையில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த மருந்தால் வெளித்தோலில் தேய்த்த உங்களுக்கே இவ்வுளவு எரிச்சல் மற்றும் அரிப்பு என்றால் பெண்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்..
நல்ல வேலையாக மேற்கூறிய நபர் எரிச்சல் பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்றார். சிலர் தங்களின் மனைவியை வற்புறுத்தி கற்பழிக்கும் சூழலில், காமுக வேட்கையால் பெண்களுக்கும் பல வேதனைகளை கொடுத்துவிடுகின்றனர். மருத்துவ விதிகளின் படி, தாம்பத்திய விஷயங்களில் 100 விழுக்காடு பிரச்சனை சரி செய்தல் என்ற தீர்வை மருத்துவர் அளிக்க கூடாது என்று உள்ளது.

ஆனால், இங்குள்ள விற்பனையாளர்களோ தங்களின் பொருளை விற்பனை செய்ய எண்ணி, தங்களின் மனதிற்குள் ஏற்படும் கற்பனைகளை தீர்வுகளாக தெரிவிக்கின்றனர். இவைகளில் அங்கீகாரம் செயல்படாத மருந்துகளே அதிகளவு விற்பனையாகிறது. பிற விஷயங்களுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதை போல, இதற்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். மாறாக விபரமே தெரியாமல் வாங்கி கண்டதையும் கண்ட இடத்தில் தேய்த்தால், நடுராத்திரி உல்லாசத்தை இழந்து மருத்துவரை தேடி செல்லும் அவல நிலையும் ஏற்படும்.
பிற மருந்துகளை விட, ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பில் போடப்படும் இயல்பான மருந்துகளாக இருந்தாலும் சரி, புண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு போடப்படும் மருந்துகளாக இருந்தாலும் சரி சுதாரித்து செயல்பட வில்லை என்றால் பேராபத்து நமக்குத்தான். மருத்துவர்களிடம் சென்றால் நன்கு சோதனை செய்த பின்னரே, நமது உடலுக்கு தேவையான மருந்துகளை கொடுப்பார்கள். அதுபோலத்தான் இந்த விஷயத்திற்கும். அற்பமான விளம்பரங்களை நம்பி பாலியல் விவகாரத்தில் ஏமார்ந்தால், பின்விளைவு எக்குத்தப்பாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

வீண் விளம்பரங்களை பார்த்து ஏமார்ந்து, அதிக திருப்தி செய்ய வேண்டும் என்று எண்ணி தாம்பத்தியத்தின் உண்மையான இன்பத்தை தம்பதிகள் இழக்க வேண்டாம். தங்களால் செய்ய முடிந்ததை திருப்தியாக செய்து, துணைக்கு விருப்பத்தை நிறைவேற்றினாலே எந்த பிரச்சனையும் கிடைக்காது. ஆண்மையை நிரூபிக்க போகிறேன் என்ற பெயரில், அதிக நேர புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஆணுறுப்பை பாழாக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Sexual time Penis Cream Disadvanges Tamil First Night tips