ட்விட்டரின் புதிய கட்டுப்பாடுகளுக்கு தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ ஆதரவு.!! - Seithipunal
Seithipunal


ட்விட்டரின் புதிய கட்டுப்பாடுகளுக்கு தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ ஆதரவு.!!

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். அதன் பின்னர் பல மாற்றங்களையும், புது புதுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. 

இது குறித்த அறிவிப்பை கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். அதாவது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ எலான் மஸ்க் அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டுக்கு ஆதரவுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " டுவிட்டர் போன்ற ஒரு பணியைக் கொண்டிருக்கும் போது தளத்தை வலுப்படுத்த பெரிய நகர்வுகளை செய்ய வேண்டும். 

இந்த நடவடிக்கையானது தரவு ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் "தீவிர நிலைகளை" ஊக்கப்படுத்துகிறது. எங்கள் பயனர் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, எங்கள் தளத்திலிருந்து ஸ்பேம் மற்றும் போட்களை அகற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter CEO Linda Yaccarino backs Twitters new controls


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->