#பெரு :: தலைநகர் அருகே 3, 000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு..! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா நாடான பெருவில் தலைநகர் லிமா பகுதியில் சான் மார்கோஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது நேற்று முன்தினம் ஆராய்ச்சி பணிகளின் பொழுது பருத்தி மூட்டையில் சுற்றப்பட்டிருந்த மம்மியின் முடி மற்றும் மண்டை ஓட்டின் இருப்பதை கண்டறிந்தனர். 

இதைதொடரந்து மண்டை ஓடு மற்றும் இதர எஞ்சிய உருவங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த மம்மி சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது என்றும், கிமு 1500 மற்றும் 1000க்கு இடையில் லிமா பள்ளத்தாக்குகளில் உருவான மஞ்சாய் கலாச்சாரத்தை சேர்ந்தது என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இறந்த உடல்கள் கெடாமல் இருக்க சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட பொருட்களுடன் புதைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மம்மியில் சில முடிகளும் தோலும் இன்னும் அப்படியே இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்ற ஆராய்ச்சி பணிகளுக்காக மம்மியின் எஞ்சிய உருவங்களை லிமாவிலுள்ள ஆராய்ச்சி கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெருவின் முதல் மம்மி கிடைத்த காஜாமார்கிலா இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த மம்மி கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 years old mummy found in Peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->