தங்க சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து - 27 பேர் உயிரிழந்த சோகம் - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கே அரேக்விபா நகரில் லா எஸ்பெரான்சா என்ற சிறிய அளவிலான தங்கச்சுரங்கம் இயங்கி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்த சுரங்கத்தை யானகிஹுவா நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று சுரங்க ஊழியர்கள் 300 அடி ஆழத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக சுரங்கப்பாதையில் பரவியதால் பணியாளர்கள் உடனடியாக வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு விரர்கள் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் 27 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும், 175 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் யானகிஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல வருடங்களுக்கு பிறகு சுரங்கம் மோசமான விபத்தை சந்தித்துள்ளதாகவும், மின் கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் யானகிஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 died due to fire in gold mine in peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->