பெருவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.! போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கிடையே மோதல்.! 20 பேர் காயம் - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா நாடான பெருவில் 2020ஆம் ஆண்டு முதல் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரி கட்சியை சேர்ந்த பெட்ரோ காஸ்டிலோ கடந்த ஆண்டு அதிபராக பதவி ஏற்றார்.

இதையடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தநிலையில், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இதனால் அவசர நிலையை அறிவித்ததோடு பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் அதிபருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, துணை அதிபர் டினா பொலுவார்டே அதிபராக பதவி ஏற்றார். மேலும் அரசியல் நெருக்கடியை சமாளிக்க அனைத்து தரப்பினருக்கும் அதிபர் டினா பொலுவார்டே அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் பெருவின் அன்டாஹுய்லாசன் நகரில் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 போலீசார் உட்பட 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போராட்டத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 injured in Clash between protestor and police as political chaos in peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->