#BREAKING || மீண்டும் ஸ்தம்பித்தது சென்னை.. மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் முழுவதும் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையத்தில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்யாமல் லாரிகளுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என கூறி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தென் சென்னை முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் போரூர் அருகே குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கிரீன்வேஸ் சாலை பகுதியில் உள்ள சுமார் 6000 மேற்பட்ட குடியிருப்புகளுக்கு கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்பொழுது மெட்ரோ குடிநீர் லாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக தண்ணீர் தட்டுப்பாடு உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

நேற்று சென்னை மாநகர் பேருந்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்பொழுது மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சென்னை மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro drinking water trucks are on strike in Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->