"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியில் இருந்தவர் எல்லாம் ஒரு வேட்பாளரா?" தினகரன் கிண்டல்!!  - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி உறையூரில்  திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து தேர்தல்  பிரச்சாரம் மேற்கொண்டார் 

அப்போது, "சோழ மன்னர்களின் தலைநகராம் உறையூர், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக இருந்தவர். நிதி ஆதாரத்தை 40 கோடியாக உயர்த்தியவர் , பாதாள சாக்கடை திட்டம், நடைபாதை, சாலையோர பூங்கா உள்ளிட்டவற்றை நடைமுறைப் படுத்தியவர். 

இவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலைய விரிவாக்கம், நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா, கொள்ளிடத்தில் தடுப்பணை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை செயல்படுத்துவார்.

நமக்கு சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பொது சின்னம் வழங்க உத்தரவிட்டது. 36 சின்னங்களை கொடுத்தார்கள். அதில் ஸ்க்ரூ ட்ரைவர், டூத் பேஸ்ட் ,செருப்பு என்று பல்வேறு சின்னங்கள் இருந்தன. ஆனால் தெரியாமல் பரிசுப்பெட்டகம் சின்னமும் அதில் இருந்தது.

உடனே அம்மா தாய் சேய் திட்டத்திற்கு வழங்கிய பரிசு திட்டம் நினைவுக்கு வந்தது. உடனே பரிசு பெட்டி சின்னத்தை பெற்றோம். இன்று பட்டி ,தொட்டி எல்லாம் பரிசு பெட்டகம் தான் ட்ரெண்டிங். நமக்கு யாரும் அங்கீகாரம் வழங்க தேவையில்லை மக்கள் தான் அங்கீகாரம் தர வேண்டும்.

Image result for thirunavukkarasar seithipunal

இங்கே தினம் ஒரு கட்சியில் இருந்தவர் தற்போது காங்கிரஸில் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிப்பு கூட்டத்திலும் தூங்கி விடுகின்றார். வாக்காளப் பெருமக்கள் திருச்சியின் வெற்றி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhinarkaran speech in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->