வியர்க்குருவை விரைவில் சரி செய்யும் எளிய டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் , அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடலின் வெப்பநிலையை பராமரிக்கும் வியர்வை சுரப்பிகள், உடல் அதிகமாக வெப்பமடையும்போது வியர்வையை சுரக்கிறது. 

உடலில் அதிக அளவில் தேங்கும் உப்பு கழிவுகளாக வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.  தோலில் வியர்வையால் சிறிய கட்டிகள் வருவதை வேர்க்குரு என்கிறோம். இதனை சரி செய்யும் இயற்கையான எளிய முறைகளை இதில் பார்க்கலாம். 

* காலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். நுங்கு கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் வியர் குரு குணமடையும். 

* வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு போன்றவை உடல் வெப்பத்தை குறைக்க சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன்பு கடுக்காய், நெல்லிக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். 

* அதேபோல் அதனை நீரில் கலந்து குளிக்கும் பொழுது தேய்த்து குளித்தால் வியர்க்குரு மறையும். வியர்க்குருவை சரி செய்ய வெட்டிவேர் பவுடர் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 

* வியர்க்குரு உள்ள இடங்களில் சந்தனம் பயன்படுத்தலாம். உடல் முழுவதுமே சந்தனம் பூசி குளித்தால் வியர் குரு விரைவில் குணமடையும். மேலும் மஞ்சள் கிருமி நாசினி என்பதால் அதனையும் குளிப்பதற்கு முன்பு உடலில் பூசி குளிக்கலாம். 

* அருகம்புல், மஞ்சள் இரண்டையும் அரைத்து உடலில் தேய்த்துக் கொள்ளலாம். வியர் குருவை குணப்படுத்த மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் அரைத்து பூசலாம். 

* பச்சை பயிறு, கடலைப்பருப்பு, வெந்தயம் மூன்றையும் பொடி செய்து தேய்த்து குளிக்கலாம். கற்றாழை ஜெல் வியர் குருவை போக்கும் சிறந்த மருந்தாக பயன்படும்.

 

* வெயில் காலங்களில் வறுத்து உணவு பொருட்களை தவிர்த்து விட்டு தண்ணீர் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்வது நல்லது. கார வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

* சூடான தரையில் படுத்து உறங்க கூடாது. காற்றோட்டமான இடங்களில் உறங்க வேண்டும். சீரகம், சுக்கு, ஏலக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை பொடி செய்து தினமும் சுடுதண்ணீரில் கலந்து பருகலாம். இது வெப்பத்தால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heat prickly remedies in tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->