உலக சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா! முறியடிக்கவும் வாய்ப்பு பிரகாசம்! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பல பரீட்சை செய்தன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா எப்போதும் போல அடித்து நொறுக்கினார்.

அபாரமான துவக்கத்தை கொடுத்த ரோஹித், லுங்கி நிகிடி வீசிய 5வது ஓவரில் 4, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டார். ரோஹித்தின் அதிரடியால் 4.3 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் எடுத்தது.

இன்று அதிவேக சதம் நிச்சயம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 40 (24) ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ரோஹித்  அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மொத்தம் 58 சிக்சர்கள் அடித்துள்ளார். 

இதன் மூலம் ஒரு வருடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்சின் உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

1. ரோகித் சர்மா : 58* (2023) 
1. ஏபி டி வில்லியர்ஸ் : 58 (2015)

2. கிறிஸ் கெயில் : 56 (2019)
3. ஷாஹித் அப்ரிடி : 48 (2002)

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup South Africa Rohit Sharma AB de Villiers record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->