சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி குறித்த அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகி விலகுவதாக சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். 

இந்நிலையில் மீடியா மேஷன்ஸ் நிறுவனமும் வெங்கடேஷ் பட்டும் இணைந்து சன் தொலைக்காட்சியில் புதிய சமையல் நிகழ்ச்சியை தொடங்க உள்ளனர். 

இது குறித்து வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதள பக்கத்தில், 'உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது' என குறிப்பிட்டுள்ளார். 

நேற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chef Venkatesh Bhatt new cooking show Update 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->