சமந்தாவின் புதிய திரைபடம் குறித்த அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

எப்பொழுதும் பரபரப்பாக இருந்த நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசையளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 

இறுதியாக ''சாகுந்தலம்'' என்ற திரைப்படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது நடிகை சமந்தா தொடர் சிகிச்சை மூலம் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார். 

இந்நிலையில் சமந்தா ''மா இண்டி பங்காரம்'' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குபவர் யார் என்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

மேலும் சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha new movie Update 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->