புது கட்டுப்பாடு.! இனி 1000 டவிட் மட்டுமே பார்க்க முடியும்.!! எலான் மஸ்க் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் பல ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினார். முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலை பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வேலை நீக்கத்திலிருந்து பல இந்தியர்களும் தப்பவில்லை. மேலும் ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பல நாடுகளில் டிவிட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டன.

இந்த விவகாரம் அடங்குவதற்குள்  ட்விட்டரில் இனி ப்ளூ டிக் வைத்திருக்க சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பல நம்பகத்தன்மை இல்லாத ட்விட்டர் கணக்குகளும் சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெற்றன.

இந்த நிலையில் தற்போது டிவிட்டுகளை பார்ப்பதில் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். இனி வெரிபைட் ப்ளூ டிக் பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 ட்விட்களையும், வெரிபை செய்யாத பயனர்கள் 600 ட்விட்களையும், ட்விட்டரில் புதிய பயனாளர்கள் 300 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 8,000 ட்விட்களையும், வெரிபை செய்யாத பயனர்கள் 800 ட்விட்களையும், ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 400 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு உயர்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து மீண்டும் 3 மணி நேரத்திற்குள் இந்த கட்டுப்பாடானது 10000, 1000, 500 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதற்கு காரணம் ட்விட்டர் நிறுவனத்தால் அதிக அளவிற்கு டேட்டாக்களை எடுப்பதை எலான் மஸ்க் விரும்பவில்லை என அவரே கூறியுள்ளார்.

இப்படி டேட்டாக்களை எடுத்து அதை வேறு இடங்களில் பயன்படுத்துவார்கள் என விளக்கம் அளித்துள்ளார். இதனால் கடுப்பான ட்விட்டர் பயனாளர்கள் எலான் மாஸ்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பயனாளர்கள் ட்விட்டரை உபயோகிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சில இணையதள வாசிகள் எலான் மஸ்கை கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Musk imposes new restrictions on Twitter


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->