முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைவார்கள் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி புது ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தான் மாநில அரசு வாடிக்கையாக செய்கிறது. 

தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்பதை தமிழக அரசின் பட்ஜெட் உணர்த்துகிறது. மண் பரிசோதனை திட்டத்தை 2015ல் கொண்டு பிரதமர் கொண்டு வந்தார். பல விவசாயிகள் பலனடையும் போது தமிழக அரசு இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். பா.ஜ.க.வில் இருக்கக்கூடிய கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது. ஆனால், இணைவதும், இணையாமல் செல்வதும் அந்தந்த கட்சியின் விருப்பம். 2024 தேர்தலில் தமிழகத்தில் பிரதான கட்சிகள் மூன்று மற்றும் நான்காம் இடத்திற்குச் சென்றுவிடும்.

தமிழகத்தில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள முக்கிய புள்ளிகள் ஓரிரு நாட்களில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார்கள். ஆகவே, அனைவரையும் நாங்கள் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp leader annamalai press mee6t in chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->