சற்றுமுன் நடிகர் கமலுடன் சந்தித்த பிரபல கட்சி தலைவர்! தமிழக அரசியலில் உண்டான பரபரப்பு! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான தமிழக அரசியல் கூட்டணிகளை புரட்டிப்போடும் அளவில் சற்று முன் இரு கட்சி தலைவர்களிடையே ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசனும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் நிறுவனர் பச்சமுத்து பாரிவேந்தர் சந்தித்துப் பேசியுள்ளார்கள். 

பாஜகவில் இருப்பதாக கருதபட்ட இந்திய ஜனநாயக கட்சி திடீரென மக்கள் நீதி மையம் கமலஹாசனை சந்தித்தது அரசியல்வாதிகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கமல், பரிவேந்தர் சந்திப்பு கூட்டணியாக மாறுமா என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர் கமலஹாசன் இருக்கலாம் என்று பதிலளித்துள்ளார். 

இந்நிலையில் கமலஹாசன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் விருப்பமனு குறித்து நாளை தெரிவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhassan pachamuththu meets in guindy hotel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->