சிக்கலில் சிக்கிய ஸ்டாலின்.! தொடங்கியது பிரச்சனை.!! கள்ளக்குறிச்சியால் கண்டமாகும்.. திமுக கூட்டணி உடன்பாடு.!!  - Seithipunal
Seithipunal


திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில்.,  
திமுகவிற்கு 20 தொகுதிகளும், 
காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளும், 
மதிமுக 1+1 தொகுதிகளும், 
விசிக 2 தொகுதிகளும், 
இந்திய கம்னியூஸ்ட் 2 தொகுதிகளும், 
மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் 2 தொகுதிகளும், 
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியும், 
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 1 தொகுதியும், 
இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு கூட்டணி கதவுகள் மூடப்பட்டன.  

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் தங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை என்பது குறித்த ஆலோசனை இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. 

இதில் திமுக தேர்தல் குழுவுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கலந்து கொண்டு, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி கள்ளக்குறிச்சியில் போட்டியிட போகும் வேட்பாளரை அந்த கட்சி தொண்டர்கள் வாட்ஸ் அப் மூலம் அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி,  அந்த கட்சின் வேட்பாளராக பாரிவேந்தருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

இதேபோல், திமுக உடன்பிறப்புகளும் கள்ளக்குறிச்சியில் போட்டியிட போகும் வேட்பாளரை  வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் பொன்.கௌதமசிகாமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது திமுக ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து உள்ளனர்.

ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் தலைமை அறிவிக்கும் முன்னே, தாங்களாகவே வேட்பாளரை அறிவித்து பிரச்சாரம் செய்து வருவது அந்த தொகுதியில் அரசியல் கேலிக்கூத்தாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi dmk candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->