#BREAKING || டிடிவி தினகரன் மீது பாய்ந்த வழக்கு.. காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நேற்று வேட்பமான தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கனி மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் முன்னால் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வீட்டுமனை தாக்கல் செய்ய வந்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் விதிகள் மீறிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI case failed against AMMK TTV dhinakaran


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->