சிவப்பு நிறத்தில் மாறிய புதுச்சேரி கடல்!! காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி கடல் பகுதி கடந்த இரண்டு நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியின் தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்பகுதி இன்று காலை முதல் சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இந்த செய்தி வேகமாக பரவ மக்கள் குவிய தொடங்கினர். 

சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கடற்கரையில் வீடியோ மற்றும் செல்பி எடுத்து தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதித்ததோடு கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சிவப்பு நிறமாக மாறிய கடற்பகுதியில் மீன்கள் செத்து மிகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். குறிப்பாக வைத்திகுப்பம் பகுதியில் கழிவுநீர் கலக்கும் பகுதி முதல் காந்தி சிலை பின்புறம் வரை கடல் நீரானது சிகப்பு நிறமாக மாறி இருந்தது. 

சிவப்பு நிற கடல் நீர் மாதிரியே சேகரித்ததோடு அதை ஆய்வுக்காக அனுப்பி வைத்த மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் "ஆல்கல் ப்ளூம் எனும் சிகப்பு பாசிகள் அதிக அளவில் நச்சுக்களை அவை ஊமைவதால் கடல் நீர் நிறம் மாறி இருக்கலாம்" என தெரிவித்தனர். எனினும் ஆய்வுக்குப் பிறகு உண்மையான காரணம் தெரிய வரும் என விளக்கம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry sea turned red colour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->