சூது கவ்வும் 2 இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி.! - Seithipunal
Seithipunal


நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இதில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இதனை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் 'சூது கவ்வும் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் ரிலீசை முன்னிட்டு இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுனுக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay sethupathi wishes to soodhu kavvum 2 director


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->