பழனி கோவிலில் 'ரோப் கார்' சேவை திடீர் ரத்து! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினம் தோறும் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். 

அவ்வாறு வருகின்ற பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் போன்ற சேவைகள் உள்ளது. 

இதன் மூலம் விரைவாகவும் இயற்கை அழகை ரசித்தபடி மலை கோவிலுக்கு செல்வதால் பெரும்பாலான ரோப் கார் சேவையை பயன்படுத்துகின்றனர். 

ரோப் கார் பராமரிப்பு பணி காரணமாக தினமும் ஒரு மணி நேரம், மாதத்திற்கு ஒரு நாள், வருடத்திற்கு ஒரு மாதம் என பணிகள் நடைபெறுவது வழக்கம்.  

அதன்படி இன்று பழனி முருகன் கோவிலில் ரோப் கார் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் சேவை நிறுத்தப்படுகிறது. 

எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில், மலை பாதை மூலம் மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani temple Rope car service canceled issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->