அனுமதியில்லாமல் சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது - கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடைதிறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், ஹெலி கேரளா என்ற நிறுவனம் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. 

அந்த விளம்பரத்தில், "கொச்சியில் இருந்து கோவில் சன்னிதானத்தில் விஐபி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம்" வசூலிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த விளம்பரத்தைக் கண்ட கேரள நீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த சனிக்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தேவசம் போர்டின் அனுமதியின்றி சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை விளம்பரம் செய்த தனியார் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், "சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது" என்றும் தெளிவுபடுத்தியது. அதன் பின்னர், நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்த விளம்பரத்தை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala high court order sabarimalai name not use


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->