மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இஸ்ரோ நிறுவனம் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘GSLV-F 14 என்ற ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

அதற்காக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயாராக உள்ள நிலையில், ராக்கெட்டின் இறுதிக்கட்ட பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று ஆரம்பமாகிறது. இந்த நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் GSLV-F 14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக் கோள், GSLV-F 14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban on fisherman go to sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->