திமுக வரலாற்றில் இன்று மிக மிக முக்கியமான நாள்! திமுகவின் அசத்தலான நாகரிக அரசியல்! சரியான நேரத்தில் வெளிவந்த தகவல்!  - Seithipunal
Seithipunal


திமுக வரலாற்றில் முக்கியமான நாள், அப்படி என்ன நாள் என்று அனைவரும் பெரியதாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்த நாள் தான் இன்று. 

ஆனால் எதேச்சையாக இந்த கிழிந்த சட்டை விஷயமானது நேற்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் பேசப்போக அதற்கு ஏற்றார்போல் இதே தேதியில் அந்த சம்பவம் நடந்திருக்க இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நேற்று  தனியார் நிகழ்ச்சியில் பேசிய போது, நான் சட்டசபைக்கு சென்றால் சட்டையை கிழித்து கொண்டு நிற்க மாட்டேன். அப்படியே சட்டையை கிழிந்தாலும் மற்று சட்டையோடு தான் வெளியே வருவேன் என்று அறிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தரப்பில் இருந்து ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுப்போம் என்று அறிவித்திருந்தார். எதிர்பார்த்தது போலவே முரசொலியில் இன்றும் கடுமையான விமர்சனங்கள் வைத்து கட்டுரை ஒன்றை திமுக வெளியிட்டுள்ளது. திமுக தரப்பில் முரசொலியில் பிரசுரிக்கபட்டுள்ள கட்டுரையில் "கமலஹாசன்  பேசுவது யாருக்கும் புரியாமல் அதைக் கேட்பவர்கள் தான் சட்டையை கிழித்துக் கொண்டிருக்க வேண்டும் அவர் ஒருபோதும் கிழித்துக்கொள்ள மாட்டார்" என திமுக தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது.  

ஆனால் இதற்கு இணையவாசிகள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒவ்வொரு மேடையிலும் பேசுவதை பார்த்தால் தான் சட்டையை கிழித்துக்கொண்டு சுற்று நிலை திமுகவிற்கு வரும்போல என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் துணை முதலமைச்சராக இருந்தபோது என்று உளறலாக பேச அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினுடைய பேச்சை மறைத்துவிட்டு திமுகவினர் கமலஹாசனுக்கு உளறல்நாயகன் என்று பட்டம் கொடுப்பது  வியப்பாக உள்ளது. 

70 வருடம் பாரம்பரியம் கொண்ட திமுக அண்மைகாலமாக தங்களை எதிர் கேள்வி கேட்கும் அரசியல் தலைவர்களை கடுமையாக தனிநபரை விமர்சித்து தங்களது பத்திரிகையில் எழுதி வருவது வாடிக்கையாக உள்ளது. கமல் சொல்வது போல சின்ன குழந்தைதனமான அரசியலை செய்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாகரிக அரசியல் என்ன விலை என்று தான் எதிர்பார்க்கனும் போல! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk slams kamal hassan in murasoli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->