உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது 'நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்' - ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் 10 மாதங்களை கடந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில் போரின் மத்தியில் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்து உக்ரைனிய ராணுவ பதக்கத்தை வழங்கினார்.

இதையடுத்து இரு நாட்டு அதிபர்களும் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினர். அதில், போர் நெருக்கடியில் அமெரிக்காவின் தலைமை மற்றும் உக்ரைனுக்கு செய்துள்ள செயல்கள் ஒட்டுமொத்த உலக மக்கள்களை ஈர்த்துள்ளதாகவும், அமெரிக்கா செய்த உதவிக்கு நன்றி கூறுவதற்கு தான் அமெரிக்கா வந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தையொட்டி உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, தொண்டு அல்ல. இது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு என்றார். மேலும் எங்கள் போர், உயிருக்கானது மட்டுமல்ல. சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது என்றும், உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது, போரில் நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky says Ukraine is alive we will never surrender


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal