27 அம்மா, ஒரு அப்பா என 200 குடும்ப உறுப்பினர்கள்... டிக் டாக்கில் வெளியான பெரிய குடும்பத்தின் குட்டி கதை.! - Seithipunal
Seithipunal


27 மனைவிகளுடன் ஒற்றுமையாக கனடா நாட்டில் 64 வயதுடைய நபர் வசித்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டிலுள்ள பவுண்டி புள் பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ்டன் பிளாக் மோர் (Winston Blackmore). இவருக்கு 27 குழந்தைகள் மற்றும் 150 குழந்தைகள் இருக்கின்றனர். 

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது. 200 குடும்ப உறுப்பினர்களை கொண்ட பாளிகேமி (Polygamy) என்ற முறையில் மகிழ்ச்சியாக இவர்கள் இருந்துவரும் நிலையில், ஒரு கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்வது பாளிகேமி என்று கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக் மோரின் 19 வயது மகன் மேர்லின் (Merlin Blackmore), டிக்டாக்கில் தனது குடும்பத்தினருடன் போட்டோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகியுள்ளதை தொடர்ந்து, இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்த பதிவில், " அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். சமீபகாலமாக வேலை காரணமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், எங்களுக்குள் ஒற்றுமை குறையவில்லை.. எனது அம்மாவை மீ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை மதர் (Mother - அம்மா) என்றும் நான் அழைக்கிறேன். 

மூன்று குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கை எனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனது அப்பாவிற்கு அதிகபட்சமாக வருடத்தில் 12 குழந்தைகள் பிறந்துள்ளது. அனைவரும் விவசாய குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் இருந்த ஒற்றுமையால், இன்று வரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World largest polygamist family Canada’s Merlin Blackmore Family


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal