விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்... இன்று உலக அயோடின் தினம்...!! - Seithipunal
Seithipunal


உலக அயோடின் தினம் :

உலக அயோடின் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆல்ஃபிரட் நோபல் :

நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1863ஆம் ஆண்டு வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்.

பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்தார். 1875ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார்.

இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு உரிமையாளர் ஆவார். இவரது நினைவாக ஒரு தனிமத்திற்கு நோபலியம் என்று பெயரிடப்பட்டது. இவர் சர்வதேச அளவில் சுமார் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரெட் நோபல் 1896ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world iodine day 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal