ரஷியா, உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சு.!
Will the Russia-Ukraine war end? French President Donald Trump, Zelensky meet in Hollande
உக்ரைனில் நீண்டகால அமைதி ஏற்படுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியுள்ளேன் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்து உள்ளார்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. மேலும் போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியதை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது.மேலும் இந்த போருக்கு உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது.இதையடுத்து இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
மேலும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் ரஷிய அதிபருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசி வழியே பேசினார்.
எனினும், உக்ரைனை தவிர்த்து விட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறப்படுகிறது.
டிரம்ப்பின் இந்த முடிவால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த சூழலில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தலைமையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் பாரீஸ் நகரில் நடந்துள்ளது.
இதுபற்றி மேக்ரான் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், ஐரோப்பிய தலைவர்கள் பலரை ஒன்றிணைத்து கொண்டு வந்து, உள்ளேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நான் பேசியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும் உக்ரைனில் வலுவான மற்றும் நீண்டகால அமைதி வேண்டும் என கேட்கிறோம் என்றும் இதனை அடைவதற்கு, காரணமேயின்றி போர் செய்யும் போக்கை ரஷியா நிறுத்த வேண்டும் என்றும் அதனுடன், உக்ரைன் மக்களுக்கு வலிமையான மற்றும் நம்பத்தக்க பாதுகாப்பு உத்தரவாதங்களும் அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பதிவிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ,அப்படி இல்லையெனில், மின்ஸ்க் ஒப்பந்தங்கள் போன்று இந்த போர் நிறுத்த ஒப்பந்தமும் முடிந்து போகும் ஆபத்து உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் உக்ரைனியர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
English Summary
Will the Russia-Ukraine war end? French President Donald Trump, Zelensky meet in Hollande