கொந்தளிப்பாரா எலான் மஸ்க்?...ஆபாச வார்த்தைகளால் எலான் மஸ்க்கை திட்டித் தீர்த்த பிரேசில் அதிபர் மனைவி! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நாளை ஜி20 உச்சி மாநாடு துவங்க உள்ளது. இந்த மாநாட்டில்  20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த சூழலில், ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் ஊடக துறையினர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது  பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டி சில்வா, எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரான எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டினார். பேசினார். அவரது பேச்சினை அங்கு  கூடியிருந்தவர்களில் சிலர் அதனை வரவேற்று கைதட்டி உற்சாகப்படுத்திய நிலையில், இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, பிரேசிலில் நடப்பு ஆண்டின் ஒரு மாதத்தில் எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டதால், பிரேசில் அரசுக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will elon musk be violent the wife of the president of brazil scolded elon musk with obscene words


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->