ஒமிக்ரான் தொற்று.. முக்கிய எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு.!! - Seithipunal
Seithipunal


புதிய உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், சண்டிகர், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நம் நாட்டில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 

உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரசால் நம் நாட்டின் மூன்றாவது அலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.  ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளனர். 

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைத்து வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரான் தொற்று சமூக பரவலை உருவாக்க அனுமதித்தால் டெல்டாவை விட வேகமாக பரவி விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Warning for Omicron


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->