#Breaking: வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் செயலிகள் முடங்கியது.. பயனர்கள் அவதி.!! 
                                    
                                    
                                   WhatsApp Instagram Facebook Web Pages Not Working In India and Some Other Countries 4 Oct 2021 
 
                                 
                               
                                
                                      
                                            இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்சப் போன்ற செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
உலகளவில் இணையதளத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் இணையதளங்கள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையத்தளங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் தளங்கள் பெரும்பாலானோரால் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.
தங்களின் இன்பமான பொழுதுகளை இனிமையான நிகழ்வுகளை அதிகளவு பகிர இன்ஸ்டாகிராம் உதவி செய்கிறது. இதனைப்போன்று வாட்சாப் செயலி மூலமாக தங்களது நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது, செயலிகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு அல்லது அப்டேட் காரணமாக செயலிகள் முடக்குவது இயல்பானது. 

இந்நிலையில், உலகளவில் வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியுள்ளது. புதிய பதிவுகளை இட முடியாமலும், வாட்ஸப்பில் செய்திகள் அனுப்புதல், பெறுதல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள இயலாமலும் வாடிக்கையாளர்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். 

குறிப்பாக வாட்சப் வெப் என்று அழைக்கப்படும், கணினியில் உபயோகம் செய்யும் வசதியும் முடங்கியுள்ளது. இதனால் ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்கள் WhatsApp Down, Instagram Down என்ற ஹாஸ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்ய தொடங்கியுள்ளனர். 
மேலும், முகநூல் போன்ற செயலியும் முடங்கியுள்ள நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிகள் சேவை முடங்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
                                     
                                 
                   
                       English Summary
                       WhatsApp Instagram Facebook Web Pages Not Working In India and Some Other Countries 4 Oct 2021