நாட்டையே அழித்துவிடுவோம்!  கிம் ஜாங் உன் மிரட்டல்!! - Seithipunal
Seithipunal


வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தனது  நாட்டின் ஆயுத பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வடகொரியா தென்கொரிய இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து  ஜப்பான்  ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகளில்  ஈடுபட்டு  வருகிறது.

இதன் காரணமாக கொரிய  தீப கர்ப்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.  தென்கொரியா - வடகொரியா இடையிலான அனைத்து பொருளாதார ஒத்துழைப்பையும் நிறுத்திக் கொள்வதாக வடகொரிய அறிவித்துள்ளது.

போருக்கு தயார் நிலையில் இருக்கும் படி  ராணுவ வீரர்களிடையே கிம் ஜாங் உன் கூறியுள்ளது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நேற்று பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

தென் கொரியாவுடன்  தூதரக உறவை தொடரவும் பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் தென்கொரியா ஈடுபட்டால்,  அந்நாட்டை அழித்து நிர்மூலமாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

மேலும், தென் கொரியாவுடனான உறவுகளைத் துண்டிப்பதற்கு ராணுவம் தனது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த அனுமதிப்பதாகவும், எப்போது வடகொரியாவை தூண்டினாலும்,  தென் கொரியாவை அழிக்க சட்டப்பூர்வ அனுமதியை வழங்குவதாவும்  கிம் தெரிவித்துள்ளார். இதனால் கொரிய  தீப கர்ப்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We will destroy the country... Kim Jong Un threatens


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->