'போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் அமைதி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்': விளாடிமிர் புதின்..! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மனம் திறந்துள்ளார். உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ரஷ்யப் படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் அந்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ள நிலையில், இதற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவின் அமைதி திட்டம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எதிர்கால ஒப்பந்தமாக மாறக்கூடும் என்றும், இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராகவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட்டு வெளியேறினால், நாங்கள் போர் நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படைகள் அவ்வாறு செய்யாவிட்டால், அதை ராணுவ நடவடிக்கை மூலம் நாங்கள் அடைவோம் என்று எச்சரிக்கை வைத்துள்ளார். மேலும், உக்ரைனின் சட்டவிரோத தலைமையுடன் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திடுவது அர்த்தமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.  அத்துடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தபோது தேர்தலை நடத்த மறுத்ததால் உக்ரைன் தலைமை தனது சட்டப்பூர்வத் தன்மையை இழந்தது என்றும் விளாடிமிர் புதின்  மேலும் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vladimir Putin says Russia is ready to hold talks on US peace plan to end war


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->