3ம் உலகப்போர் தொடங்கியதா? தயாராகும் ஈரான் - அமெரிக்க படைகள்! பதறும் மத்திய கிழக்கு!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் சிரியாவில் பதுங்கி இருக்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் பகுதிகளின் மீது அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க துடுப்புகள் மீது ஈரானின் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமெரிக்க விமானப்படை குண்டு மழை பெய்தது. இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவுறுத்தலின்படி கிழக்கு சிரியாவில் ஈரான் இஸ்லாமிய புரட்சி படை மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் நிலைகளின் மீது அமெரிக்க படை தற்காப்பு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது ராணுவத்தை தயார் நிலையில் வைக்க ஒத்திகை சோதனை மேற்கொண்டு வருகிறது. பெரிய அளவிலான தரைப்படைகளின் பயிற்சியில் "எக்டிடார் 1402" ஹெலிகாப்டர்களை ஈரானின் மத்திய பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீரங்கி, கவச மற்றும் வான்வழிப் பிரிவுகள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.

அதேவேளையில் அமெரிக்க படைகளும் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகின்றனர். வெளிப்படையாகவே டெல் அவிவ்வில் தரை வழி தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதனால் நேரடியாக ஈரான் மற்றும் ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க தயாராகலாம். ஏவுகணை தாக்குதலை தெஹ்ரான் பகுதி பெருமளவில் பயன்படுத்தும் பட்சத்தில் அமெரிக்கா வான் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் கூடும் எனத் தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Usa and iran practice to attack on each other


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->