டிரம்ப் மீது கொலை முயற்சி வழக்கு: ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை!
us trump attempt murder case
2024 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தொடர் கொலை முயற்சிகள் உலகையே உலுக்கின. இதில் இரண்டாவது முயற்சியில் ஈடுபட்ட ரியான் வெஸ்லி ரூத் (Ryan Wesley Routh) என்பவருக்கு தற்போது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
நடந்தது என்ன?
ஜூலை - பென்சில்வேனியா: பிரசாரக் கூட்டத்தில் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (19) நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குண்டு காதை உரசிச் செல்ல டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார்.
செப்டம்பர் - புளோரிடா: தனது சொந்த கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ரியான் வெஸ்லி ரூத் போலீசாரால் துரத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்கான பின்னணி:
விசாரணையில், டிரம்ப் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் உக்ரைன் போர் விவகாரத்தில் ரூத் மிகுந்த அதிருப்தியில் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே டிரம்பைக் கொல்ல அவர் திட்டமிட்டுள்ளார். கொலை முயற்சி மற்றும் துப்பாக்கிச் சட்ட மீறல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஐலீன் கேனன் "இந்தச் செயல் தனிப்பட்ட நபர் மீதானது மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்." என தெரிவித்துள்ளார்.
குற்றவாளியின் வன்முறைப் போக்கைக் கண்டித்த நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடித் தீர்ப்பளித்தார். ஒரு தலைவரின் கொள்கைகள் பிடிக்கவில்லை என்பதற்காக ஆயுதத்தைக் கையில் எடுப்பது எவ்விதத்திலும் நியாயமற்றது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
English Summary
us trump attempt murder case