சென்னையில் இருந்து மேற்குவங்கம் சென்ற ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்து; பயணிகள் அதிர்ச்சி..!
A train traveling from Chennai to West Bengal derailed near Odisha
சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி செல்லும் 'ஜல்பைகுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' ரெயில் ஒடிசாவில் இன்று தடம் புரண்டது. இன்று காலை 8.51 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த ரெயிலின் ஒரு ஏசி பெட்டி, 02 பொது பெட்டி என மொத்தம் 03 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றுள்ளன.
ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்ட நிலையில், இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கும் பிறகு அப்பகுதியில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. திடீரென ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பயணிகள் பதற்றம் அடைந்துள்ளனர்.
English Summary
A train traveling from Chennai to West Bengal derailed near Odisha