WPL 2026: வோல்ஸ் ஸ்மிருதி அதிரடி; டெல்லியை வீழ்த்தி 02வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங்களூரு..!
Royal Challengers Bangalore have won the WPL 2026 title for the second time by defeating Delhi
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று வதோதராவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பல பரீட்சை நடத்தின. போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில், பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 04 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரசிச்சதம் கடந்து 57 ரன்னும், லாரா வோல்வார்ட் 44 ரன்னும், லிஸ்ஸி லீ 37 ரன்னும் எடுத்தனர்.
சினேலி ஹென்றி 15 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. இதை கிரேஸ் ஹாரிஸ் 09 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்ததாக, கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜார்ஜியா வோல் இணைந்து அதிரடியில் அதிரவைத்தது. இருவரும் அதிரடியில் அரை சதம் கடந்தனர். 02வது விக்கெட்டுக்க்காக 165 ரன்கள் சேர்த்த நிலையில் ஜார்ஜியா வோல் 79 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 04 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 02வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. மறுபுறம் நான்கு முறை இறுதிப்போட்டிக்கு வந்த டெல்லி அணி, இம்முறையும் கோப்பையை நழுவவிட்டுள்ளது.
English Summary
Royal Challengers Bangalore have won the WPL 2026 title for the second time by defeating Delhi