'அமெரிக்காவின் ஒரு சோளத்தை கூட இந்தியாவில் வாங்க மாட்டார்கள்:அவர்கள் வரியை குறைக்க வேண்டும்': அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர்..!
US Commerce Secretary says India should reduce tariffs on American goods
இந்தியா வரியை குறைக்க வேண்டும் என அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார். அவ்வாறு குறைக்கவில்லை எனில், அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்வதற்கு கடினமான நேரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் மேலும், கூறியுள்ளதாவது: நட்பு நாடுகளுடனான உறவு நீடிக்கிறது. அவர்களது பொருட்களை இங்கு வந்து விற்கின்றதாகவும், அவர்களிடம் இருந்து சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஆனால், அவர்களது பொருளாதாரத்தில் நம்மை தடுக்கின்றனர் என்று பேசியுள்ளார்.

அத்துடன், இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் ஒரு சோளத்தை கூட இந்தியாவில் வாங்க மாட்டார்கள். அனைத்துக்கும் அவர்கள்வரி விதிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இதனால் தான், வரியை குறைக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறுகிறார் என்றும், எங்களை எப்படி நடத்துகிறீர்களோ, அதேபோல் உங்களை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் பல ஆண்டுகளாக நாம் செய்த தவறை சரிசெய்ய வேண்டும் என்றும், இதை சரி செய்யும் வரை வேறு வழியில் கட்டணத்தை விதிக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தியா அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும், அல்லது உலகின் மிகப்பெரிய நுகர்வோருடன் வணிகம் செய்வதில் இந்தியாவுக்கு பெரிய பிரச்சினை ஏற்படும் என்று அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
English Summary
US Commerce Secretary says India should reduce tariffs on American goods