வரலாறு காணாத சரிவு… டாலருக்கு எதிராக ரூபாய் சரிவு...! - பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு...! - Seithipunal
Seithipunal


இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிந்து, பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.94.15 என்ற புதிய குறைந்த நிலையை எட்டியதுடன், பின்னர் மேலும் சரிந்து ரூ.94.26 வரை தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற தொடங்கியிருப்பதே இந்த சரிவிற்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்நிய செலாவணி சந்தையில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சி, இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் தெளிவாகப் பிரதிபலித்தது.

நிப்டி 50 குறியீடு 50 புள்ளிகள் சரிந்து 22,950 புள்ளிகளில் வர்த்தகம் ஆக, சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 74,200 புள்ளிகளாக சரிந்தது. இந்த திடீர் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.6 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் இந்த ரூபாய் சரிவு, பங்குச்சந்தை வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டைச் சுற்றியுள்ள கவலைகளை அதிகரித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unprecedented decline Rupee falls against dollar Investors lose crores stock market


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->