'கண் இமைக்கும் நேரத்தில் விபரீதம்'...! வீட்டின் அருகே நின்ற தென்னை மரத்தால் நிகழ்ந்த சோகம்...! - மின்னல் தாக்கி 18 வயது மாணவர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே இடி, மின்னலுடன் பெய்த கனமழையின்போது, வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. அப்போது வீட்டுக்குள் இருந்த 18 வயது பாலிடெக்னிக் மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி.

இவரது மகன் ஸ்டாலின் (18). இவர் கப்பியம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்டாலின் தனது தாய் சரிதா (40) உடன் வீட்டில் இருந்தார்.

அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தது.அந்த நேரத்தில், ஸ்டாலினின் வீட்டுச் சுவரை ஒட்டி நின்றிருந்த தென்னை மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது.

இதன் தாக்கம் வீட்டுக்குள்ளும் ஏற்பட்ட நிலையில், அங்கு இருந்த ஸ்டாலின் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இளம் வயதிலேயே மாணவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வளவனூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Misfortune in the blink of an eye Tragedy caused by coconut tree standing near house 18 year old student dies after being struck by lightning


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->