'வேற யார்கிட்டயும் பேசக் கூடாது...! - காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தப்பியோட்டம்...! - Seithipunal
Seithipunal


திருப்பூரில், சமூக வலைதளத்தை அதிக நேரம் பயன்படுத்தியதால் காதலியின் மீது சந்தேகமடைந்த இளைஞர், அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியில், திருப்பூர் சந்திராபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவரும் பயின்று வருகிறார்.ஒரே கல்லூரியில் படித்து வந்த இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்தும், செல்போன் வாயிலாகப் பேசியும் தங்களது உறவைத் தொடர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், மாணவி சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிடுவதைப் பார்த்த அவரது காதலன், அவர் வேறு யாருடனாவது பேசுகிறாரோ என்ற சந்தேகத்தில் ஆழ்ந்தார். இதையடுத்து, தன்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்றும், சமூக வலைதளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மாணவியிடம் கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. காதலனின் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை, நாளடைவில் இருவருக்கும் இடையிலான மோதலாகத் தீவிரமடைந்தது.இந்தச் சூழலில், சம்பவத்தன்று மாணவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற காதலன், மாணவியின் செல்போனை வாங்கி, அவர் சமூக வலைதளத்தில் யாருடன் உரையாடியுள்ளார் என்பதைப் பார்வையிட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற அந்த இளைஞர், ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துத் மாணவியைச் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார்.மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தக் காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு உடனடியாகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இளைஞரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont talk to anyone else Boyfriend stabs girlfriend and runs away


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->