'வெளுத்து வாங்கப் போகுது...' சென்னையில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வார்னிங்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல இடங்களில் மழை பெய்த நிலையில், நேற்றுப் பகலில் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து, மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு, மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.

குறிப்பாக, வடசென்னையின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில மணி நேரங்களிலேயே மிக அதிகமான மழைப்பொழிவு பதிவானதால், இந்த மழை மேகவெடிப்பைப் போன்ற தீவிரத்துடன் இருந்தது.

சென்னையில் பெய்த கனமழையில் கத்திவாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் 26 சென்டிமீட்டர் மழை பதிவானது. குறுகிய நேரத்தில் இவ்வளவு அதிக அளவு மழை பெய்ததால், வடசென்னையின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் கடுமையாக இருந்தது.இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களில் அடர்த்தியான மேகக் கூட்டங்கள் தென்படுவதால், மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால் வடகடலோரப் பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், இன்றும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Its going to be a rainy day Chennai likely receive very heavy rain today Meteorological Department warns


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->