'இந்தியா மீது அமெரிக்க வரி விதித்தது வரவேற்கத்தக்க நடவடிக்கை': உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!
Ukrainian President Zelensky says US tariffs on India are a welcome move
இந்தியா மீது அமெரிக்க வரி விதித்த்துள்ளமை சரியான நடவடிக்கை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியா இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீத வரி விதித்துள்ளது.
இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை கொண்டு உக்ரைன் போருக்கு ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதன் காரணமாக அபாரத்துடன் கூடிய 50 வீத வரியை இந்தியா மீதி விதித்துள்ளதால் அமெரிக்கா- இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. தொடர்ந்து தேச நலனுக்காக கச்சா எண்ணெய்யை வாங்குவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வாஷிங்டன் செய்தியாளர்களிடம் பேசி அமெரிக்க வர்த்தகம் அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரி விதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதித்தால் ரஷ்யாமிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரஷ்யாவுக்கு கிடைக்கும் நிதி ஆதாயம் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடியாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும். ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என நினைக்கும் நாடுகள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Ukrainian President Zelensky says US tariffs on India are a welcome move