உள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்திய பெண்மணி.. சர்ச்சையில் சிக்கிய ஊழியர்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பல விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து விதிக்கட்டு வருகிறது.. உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாத துவக்கம் முதலாகவே கொரோனா வைரஸ் பரவ துவங்கிய நிலையில், மக்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டில் அடையாள அட்டையை எடுத்து செல்லவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உக்ரைன் நாட்டில் இருக்கும் கடைகள், சந்தைகள், சுரங்கபாதைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கீவில் நகரில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு இரண்டு குழந்தைகளின் தாய் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். இந்த சமயத்தில் ஊழியர்கள் முகக்கவசம் குறித்து கேட்டுள்ளனர். 

இதனையடுத்து முகக்கவசம் அணிந்து வாராமல் வந்த பெண்மணி, தனது உள்ளாடையை முகக்கவசமாக அவசரத்திற்கு உபயோகம் செய்யும் கண்காணிப்பு காமிரா காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

மேலும், இந்த விடியோவை இணையத்தில் பதிவு செய்த ஊழியரின் மீது துறை ரீதியான நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளதாகவும், உள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்த யாரும் தடை விதிக்கவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine woman use bra to cover temporary face mask


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->