உக்ரைன் போர்..நினைத்தேன்; ஆனால்... டிரம்ப் வேதனை! - Seithipunal
Seithipunal


நாங்கள் 7 போர்களை நிறுத்தி உள்ளோம். ஆனாலும் உக்ரைன் மற்றும் ரஷியா சூழ்நிலையே பெரிய அதிருப்தியான ஒன்றாக உள்ளது என டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் 80-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதன்பின்னர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை கூட்டத்தின் ஒரு பகுதியாக சந்தித்து பேசினார். இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், டிரம்பும் மேக்ரானும் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார் என தெரிவித்தது.

அப்போது டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, 2 போர்களை நிறுத்துவதற்கு உண்மையில் மேக்ரான் எனக்கு உதவினார். நாங்கள் 7 போர்களை நிறுத்தி உள்ளோம். ஆனாலும் உக்ரைன் மற்றும் ரஷியா சூழ்நிலையே பெரிய அதிருப்தியான ஒன்றாக உள்ளது. புதினுடனான நட்புறவால் அது எளிதில் நடைபெறும் என நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வகையில், அந்த உறவில் எந்த அர்த்தமும் இல்லை என்று வேதனையுடன் கூறினார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் கூறும்போது, இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, தாய்லாந்து மற்றும் கம்போடியா, அர்மீனியா மற்றும் அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் இடையேயான போர்களையும் நிறுத்தியிருக்கிறோம்.

ஒரு போரை நிறுத்தியதற்கு ஒரு நோபல் பரிசு என்றால், எனக்கு இதுவரை அமைதிக்கான 7 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தினால், உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அது பெரிய போராக உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine War I thought but Trumps agony


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->