ரஷ்யா தாக்குதலின் அச்சுறுத்தல்: கெர்சன் பகுதியை விட்டு வெளியேற மக்களுக்கு உக்ரைன் துணை பிரதமர் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா தாக்குதலின் அச்சுறுத்தலால் கெர்சன் பகுதியை விட்டு வெளியேற மக்களுக்கு உக்ரைன் துணை பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நூறு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரம் கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களை கைப்பற்றியதுடன், அடுத்தடுத்த தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனின் நிர்வாகமயமான கெர்சன் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அப்பகுதி மக்களை வெளியேறுமாறு உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் உக்ரைன் மக்களை ரஷ்யப்படைகள் மனித கேடயங்களாக பயன்படுத்தக்கூடும் என்பதால், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய ஆக்கிரமிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் தங்குவது ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine vice pm advised to evacuate people from kherson


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->