ரஷ்யாவின் தவறுகளை கண்டும் காணாததுபோல் இருக்க வேண்டாம் - அரபு நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் 32வது அரபு லீக் மாநாடு கடற்கரை நகரமான ஜெட்டாவில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் அரபு லீக் அமைப்பின் 22 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.

இந்நிலையில் மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவுடன் போரை நாங்கள் தொடுக்கவில்லை. எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் படையினர் சட்டவிரோதமாக எந்த ஒரு பகுதிகளையும் இணைத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் போரில் அரபு நாடுகள் நடுநிலை வகிக்கின்றன. இருப்பினும், ரஷ்யா செய்து வரும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டாம் என அரபு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எங்களின் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீறி உக்ரைன் போரை நேர்மையான பார்வையுடன் அணுக வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine president Zelensky says Dont turn to blind eye for Russia mistakes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->